விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டி கிராமத்தில், விருதுநகர் வடக்கு இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில், உறவின்முறையின் 2-வது ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
உறவின்முறை தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ அசோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், பாரத ரத்னா பெருந்தலைவர் காமராஜரின் கல்விச் சேவை மற்றும் தியாகங்கள் குறித்து சிறப்பித்துரைத்தார். மேலும், விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நாடார் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
