தென்னிந்தியாவின் முன்னணி சலூன் பிராண்டான ‘பேஜ் 3 சலூன்’, மதுரையின் கே.கே. நகர் கிளையில் தனது முதலாம் ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. கடந்த ஓராண்டாக உயர்தர முடி, சருமம் மற்றும் நகச் சேவைகளை வழங்கி, மதுரை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பெருமையுடன் இந்த விழாவை சலூன் குழுவினர் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக அதிகாரி சண்முக குமார், ‘உலகத்தரம் வாய்ந்த அழகு சேவைகளை மதுரைக்குக் கொண்டு வந்ததில் பெருமை கொள்கிறோம்’ என்றார். மேலும், உரிமையாளர்கள் ராஜேஷ் மற்றும் சத்யா கூறுகையில், ‘எங்கள் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களின் ஆதரவே இந்த வெற்றிக்குக் காரணம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்தச் சலூனில் Kérastase, L’Oréal மற்றும் Skeyndor போன்ற சர்வதேசத் தரத்திலான பிராண்டுகளைப் பயன்படுத்திச் சேவைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, அனைத்துச் சேவைகளுக்கும் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடியை பேஜ் 3 சலூன் அறிவித்துள்ளது. அழகு சேவைகளைப் பெற விரும்புவோர் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, உயர்தர சலூன் அனுபவத்தைப் பெற்றிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
