• Home  
  • மலையடிப்பட்டியில் சங்ககாலப் படிக்கட்டுக் கிணறு கண்டுபிடிப்பு
- Virudhunagar

மலையடிப்பட்டியில் சங்ககாலப் படிக்கட்டுக் கிணறு கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலப் படிக்கட்டுக் கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த முக்கிய கண்டுபிடிப்பு, தமிழக வரலாற்றில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடிக்கு இணையாக, வைப்பாற்று நாகரிகத்தின் தொன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இப்பகுதியை நேரில் பார்வையிட்ட முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு அவர்கள், அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நுண்கற்காலம் முதல் வரலாற்று காலம் வரை தொடர்ச்சியான மனித வாழ்விடத்திற்கு இங்கு சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானியக் காசுகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், இப்பகுதி அன்று சர்வதேச வாணிபத் தளமாக விளங்கியது உறுதியாகிறது’ என்று தெரிவித்தார்.

கண்ணாடி மணிகள், விளையாட்டுக்காய்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் எனப் பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளது மலையடிப்பட்டியின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வுகள், தமிழக வரலாற்றிற்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் நடைபெற வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.