• Home  
  • முதல்வரை அவதூறாகப் பேசிய செல்லூர் ராஜூ – கைது செய்யக் கோரி புகார்
- Madurai

முதல்வரை அவதூறாகப் பேசிய செல்லூர் ராஜூ – கைது செய்யக் கோரி புகார்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தவெக வழக்கறிஞர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில், “அண்ணா தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சரின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அநாகரிகமாகப் பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவதூறு பேச்சிற்கான வீடியோ ஆதாரங்களை ஒரு பென்டிரைவ் (Pen drive) மூலம் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ள அவர், செல்லூர் ராஜூவைக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், செல்லூர் ராஜூ நடத்தும் கூட்டங்களைத் தவெக உறுப்பினர்களைத் திரட்டி முற்றுகையிடுவோம் என்றும் தவெக வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.