விருதுநகர் தங்கச்சி அம்மன் திருமண மண்டபத்தில், விருதுநகர் இந்து நாடார்கள் உறவின் முறையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் மகேந்திரன் மற்றும் செயலாளர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2025 முதல் 2025-26-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையைச் (ஆடிட்டிங்) சமர்ப்பித்து, மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும், விருதுநகர் இந்து நாடார்கள் உறவின் முறையின் வளர்ச்சிக்குத் தேவையான அடுத்த கட்டப் பணிகள் குறித்தும் நிர்வாகிகள் தங்களது ஆலோசனைகளை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் நலப்பணிகளுக்கும் இந்தப் பொதுக்குழு கூட்டம் ஒரு முக்கியமான படியாக அமைந்தது.
