• Home  
  • அழகாபுரி புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
- Virudhunagar

அழகாபுரி புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

அழகாபுரி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத் திறப்பு விழா நடைபெற்றது.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கார்த்திக் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார். கிராமப்புறக் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு இதுபோன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மையங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக விழாவில் குறிப்பிடப்பட்டது.

புதிதாகத் திறக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தால் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்களும் சிறு குழந்தைகளும் மிகுந்த பயன் அடைவார்கள் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.