விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் விஜயரெங்காபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா வழங்கினார்.
விழாவில் பேசிய ஆட்சியர், தகுதியான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அரசு புறம்போக்கு இடங்கள் மூலமாகவோ அல்லது தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியோ இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன்படி, விஜயரெங்காபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 3 சென்ட் வீதம் மொத்தம் 22 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மக்கள் சொந்த வீட்டுமனையுடன் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திருமதி ஆண்டாள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்
விஜயரெங்காபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்
