நீட் தேர்வு குறித்த தவறான பிரச்சாரங்களைத் தடுத்து அதன் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் எனத் திருவண்ணாமலை ஆதீனம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்குச் சமமான மருத்துவக் கல்வி வாய்ப்பை வழங்குவதில் நீட் தேர்வு முக்கியப் பங்காற்றுவதாகத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே தவறான புரிதல்களைப் பரப்புவது அவர்களின் மருத்துவக் கல்வி கனவைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வை முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- Madurai
நீட் தேர்வு நம்பகத்தன்மை காக்க மனு
நீட் தேர்வு நம்பகத்தன்மை காக்க திருவண்ணாமலை ஆதீனம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
