• Home  
  • மருத்துவக் கழிவுகள் முறைகேடு – மருத்துவர்கள் புகார்
- Madurai

மருத்துவக் கழிவுகள் முறைகேடு – மருத்துவர்கள் புகார்

தென் மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் அகற்றுவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி மதுரை ஆட்சியரிடம் மருத்துவர்கள் மனு

தென் மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் அகற்றுவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி, மருத்துவக் கழிவுகளுடன் வந்து மதுரை ஆட்சியரிடம் மருத்துவர்கள் மனு அளித்தனர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகள் உரிய நடைமுறைகளின்படி அகற்றப்படாமல் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்குப் பரவும் கடுமையான நோய்த்தொற்றுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி, மருத்துவர்கள் மருத்துவக் கழிவுகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இது குறித்துப் பேசிய மருத்துவர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கும்மிடிப்பூண்டி அல்லது எடப்பாடியில் எரிப்பதாகக் கூறி முரணான பதில்களைத் தருவதாகவும் குற்றம்சாட்டினர். எனவே, முறையான நடைமுறைகளை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுரை மாநகரப் பகுதியில் பிரத்யேக மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.