• Home  
  • பழனி கோவில் நில மோசடி – 4 பேர் கைது
- Dindigul

பழனி கோவில் நில மோசடி – 4 பேர் கைது

பழனி கோவில் நில மோசடி – 4 பேர் கைது, மேலும் ஒருவருக்கு வலைவீச்சு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார், தற்போது முக்கியக் குற்றவாளிகள் 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

கோவில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி, மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அவர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். தலைமறைவாக உள்ள நிலப் புரோக்கர் ஜெயபிரகாஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, மற்றும் வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய நான்கு பேரையும் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் போலீசார் ஆஜர்படுத்தினர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.