ரங்கநாதா! உன் அருள் என்றும் துணை நிற்க!!!
A Song on Arulmigu Aranganatha Swamy, Srirangam.
காவேரி தீரத்தில் கண்துயிலும் ரங்கநாதா!
திகழும் எம்மருந்தே! திருவரங்கச் செல்வா!
ஆதிமூலமே! அருட்பெருஞ்ஜோதியே!
நீலமேக வண்ணனே! நிறைசெல்வப் பிழம்பே!
ஸ்ரீரங்கநாதா!
அரங்கமா நகருறை அச்சுதா! அனந்தா!
திருப்பாற்கடலில் துயில்பவனே! துயர் தீர்ப்பவனே!
திருநாமம் செப்புவார் சித்தமெல்லாம் குளிர்ந்திடும்!
சித்தம் உருகிட! சேவிக்க வாரும் அடியார் கோடி!
ஸ்ரீரங்கநாதா!
பக்தர்தம் குறைகள் போக்கும் பரந்தாமா!
நின் பொற்பாதம் பணிந்தோம்! நெஞ்சம் உருகிட!
மங்களங்கள் பொங்கட்டும்! மனம் மகிழ!
ரங்கநாதா! உன் அருள் என்றும் துணை நிற்க!
ஆனந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே
சசாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே.
ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமானே விமானே
காவேரீ மத்யதேசே பணிபதிஸயனே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம் பஜேஹம்!
ஸ்ரீரங்க ரங்கநாதர் போற்றி!
- Temples
ரங்கநாதா! உன் அருள் என்றும் துணை நிற்க
ரங்கநாதா! உன் அருள் என்றும் துணை நிற்க. ஸ்ரீ ரெங்கம் அரங்கநாத சுவாமி.
