பழனி தண்டாயுதபாணி மடம் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில், சிபிசிஐடி தரப்பு நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் பத்திரப்பதிவு முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்பொழுது, வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- Madurai
தண்டாயுதபாணி மடம் விவகாரம்
பழனி தண்டாயுதபாணி மடம் விவகாரம் – சிபிசிஐடிக்கு உத்தரவு
