மதுரை மாட்டுத்தாவணி மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி மற்றும் பிரசாந்த் தியாகராஜன் ஆகியோர் இந்த அதிநவீன மருத்துவ சாதனத்தின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தனர்.
உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ள இந்த நவீன ரோபோடிக் கருவி மூலம், குடல், கல்லீரல், சிறுநீரகப் பாதை மற்றும் புற்றுநோய் போன்ற சிக்கலான அறுவைசிகிச்சைகளை மிகத் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர் குருசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, "மதுரையில் இது போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி அறிமுகமானது வரவேற்கத்தக்கது. மேலும், எனது அடுத்த படக் களம் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்கள் எவ்வாறு நிம்மதியாகவும் விழிப்புணர்வுடனும் வாழ வேண்டும் என்பதையும் பேசும் படமாக இருக்கும்" என்றார்.
- Madurai
நவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம்
மதுரையில் நவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுக விழா
