பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்காகச் சிறப்புப் பார்வைக்கு வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டங்களின் செயற்கைக்கோள் மாதிரிகள், ரோவர், லேண்டர் மற்றும் விண்வெளி வீரர் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை இஸ்ரோ அதிகாரிகள் மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கமளித்தனர். மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சியைப் பார்வையிட்டு, இஸ்ரோ அதிகாரிகளிடம் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.
இந்தக் கண்காட்சியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் மீது பெரும் ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Dindigul
பழனியில் இஸ்ரோ கண்காட்சி வாகனம்
பழனியில் இஸ்ரோ விழிப்புணர்வு கண்காட்சி வாகனம்
