• Home  
  • மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- Dindigul

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் பழனி நான்கு வழிச்சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மின்வாரியத்தில் காலியாக உள்ள எழுபதாயிரம் பணியிடங்களை இவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், மின் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 250 ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.