மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வெற்றி தமிழர் பேரவையின் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சரிந்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்புகளையும் வசதிகளையும் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாய்மொழி என்பது கண் போன்றது என்றும், பிற மொழிகள் கண்ணாடிகளைப் போன்றவை என்றும் குறிப்பிட்டார். தேவைப்படும்போது இந்திகூடக் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
மேலும், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள அவர், கலாச்சார வீழ்ச்சி ஏற்படாமல் மேலிடங்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வைரமுத்து வலியுறுத்தினார்.
- Madurai
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வைரமுத்து கோரிக்கை
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற வெற்றி தமிழர் பேரவையின் நிகழ்ச்சி – அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வைரமுத்து கோரிக்கை
