• Home  
  • வத்தலக்குண்டில் ஓடும் பேருந்தில் பயங்கரம்
- Dindigul

வத்தலக்குண்டில் ஓடும் பேருந்தில் பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஓடும் பேருந்தில் பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நள்ளிரவில் பயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்து வாழ்ந்த தேவாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகுமார், தனது மனைவியும் ,மகளும் திருப்பூரிலிருந்து அரசுப் பேருந்தில் ஊருக்குத் திரும்புவதை அறிந்துள்ளார். வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் மறைந்திருந்த அவர், பேருந்து நின்றதும் திடீரென உள்ளே ஏறி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியையும் மகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

பயணிகளின் கூச்சலை அடுத்து, பேருந்து ஓட்டுநர் உடனடியாக வத்தலக்குண்டு காவல் நிலையம் அருகே பேருந்தை நிறுத்தினார். அங்கிருந்த காவல்துறையினர் தப்பியோட முயன்ற மணிகுமாரை அரிவாளுடன் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

படுகாயமடைந்த தாயும் மகளும் தற்போது தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.