• Home  
  • விவசாயிகளுக்கு கோத்ரெஜ் அக்ரோவெட் ஆதரவு
- Madurai

விவசாயிகளுக்கு கோத்ரெஜ் அக்ரோவெட் ஆதரவு

மக்காச்சோள விவசாயிகளுக்கு கோத்ரெஜ் அக்ரோவெட் ஆதரவு

தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் தனது 'அஷிடாகா' மற்றும் 'டக்காய்' ஆகிய பயிர் பாதுகாப்புத் தீர்வுகளை வலுப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மக்காச்சோளம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 13.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக மதுரை மண்டலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலையில் களைகளின் தொல்லையும், படைப்புழு (Fall Armyworm) தாக்குதலும் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன.

இதைச் சமாளிக்கும் விதமாக, புல் மற்றும் அகன்ற இலைக் களைகளைத் திறம்படக் கட்டுப்படுத்த 'அஷிடாகா' களைக்கொல்லியும், படைப்புழுக்களின் தாக்குதலைத் தடுத்து நீண்டகாலப் பாதுகாப்பு வழங்க 'டக்காய்' புழுக்கொல்லியும் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் மகசூலைப் பாதுகாக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் கோத்ரெஜ் அக்ரோவெட் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.