நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளி அருகிலுள்ள காமராஜர் சிலை முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு, கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று தேசபந்து மைதானத்தை அடைந்தது. அங்கு தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வழக்கறிஞர்கள் சரவணன், வெயில்முத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
தொகுதி மறுவரைவு எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தொகுதி மறுவரைவு எதிர்த்து விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
