• Home  
  • பழனி நில மோசடி வழக்கு – வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு
- Madurai

பழனி நில மோசடி வழக்கு – வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு

பழனி நில மோசடி வழக்கு – கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் எஸ்.அன்வர்தீன் உடல்நலக் குறைவால் காலமானார்.

பழனி தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் பக்கவாத பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறையில் திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாகச் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் சட்டப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன், இதுகுறித்துத் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.