• Home  
  • விருதுநகர் நகராட்சியில் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
- Virudhunagar

விருதுநகர் நகராட்சியில் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் நகராட்சியில் எம்.எல்.ஏ செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் விஜயகுமார், நகரமைப்புப் பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் எம்.எல்.ஏ. செல்வம் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்துக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் நகராட்சி நிர்வாகமும் மக்கள் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. செல்வம் கேட்டுக்கொண்டார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.