• Home  
  • மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
- Madurai

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிலைப் பாடுகள் குறித்துப் பேசினார்.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் காட்ட வேண்டாம் எனவும், பல பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் பக்தியோடு இதனைச் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மதுரை குப்பைகள் நிறைந்த நகராக உள்ளதாகவும், இதில் கூட ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.

திமுகவைப் போல் எதற்கெடுத்தாலும் கடுமையாக எதிர்ப்பது தவெக-வுக்கு நல்லதல்ல என்றும், கடந்த காலங்களைப் போல எதற்கெடுத்தாலும் மோதும் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். கொள்கை ரீதியாக மாறுபட்டாலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

தொகுதி மறுவரை விவகாரத்தில் சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று விஜய் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்றும், தமிழ்நாட்டின் சதவீதம் எந்த வகையிலும் குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.