விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், விருதுநகர் இந்து நாடர்களுக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை மிகச் சிறப்பாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது.
மாதா அமிர்தானந்தமயி மடம் சுவாமி கமலானந்தர் கலந்துகொண்டு ஆன்மிக ஆசியுரை வழங்கித் திருவிளக்குப் பூஜையைத் தொடக்கி வைத்தார்.
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தமிழ்நாடு, கேரளா மாநிலத் தலைவர் வன்னியராஜன் முன்னிலை வகித்தார். மேலும், விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் சக்தியோகா சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். ராஜபிரபு, தினேஷ் ராஜா, சதாசிவம், பாபு, ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பொதுமக்களைத் தொடர்புகொண்டு பூஜையில் பங்கேற்கச் செய்திருந்தனர்.
பூஜையில் திரளாகக் கலந்துகொண்ட பக்தர்கள் திருவிளக்கேற்றி அம்மன் பஜனைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிப்பட்டனர். விழாவின் இறுதியில் விசுவ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் ராஜ்குமார் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
- Virudhunagar
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை
