விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அசன் ஹோட்டல் முன்பு, தமிழக மக்கள் இயக்கம் சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
100 நாள் வேலை உறுதித் திட்டத்தைப் பாதுகாத்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தல், பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தை வணிகமயமாக்குவதை தடுத்தல், மற்றும் மாநில உரிமைகள், தாய்மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஜனநாயக உரிமைகளையும் நிறுவனங்களையும் பாதுகாக்கக் கோரிய இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மற்றும் பல்வேறு முற்போக்குச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
- Virudhunagar
தமிழக மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
