மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் 'மக்கள் சந்திப்பு இயக்கம்' நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் இவஇயக்கத்தின் மூலம் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிளைச் செயலாளர் பெ. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆ. குருசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அல்லம்பட்டி பகுதிக்கு நேரில் சென்ற மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர். மேலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். முருகன், மாவட்ட குழு உறுப்பினர் எம். சாராள், நகர் செயலாளர் எம். ஜெயபாரத், நகர் குழு உறுப்பினர் எம். செல்வம் மற்றும் கிளை மூத்த தோழர்கள் கே. பாலு, வேல்முருகன், சாவித்திரி உள்ளிட்ட ஏராளமான கட்சித் தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – மக்கள் சந்திப்பு இயக்கம்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
