ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று, நாடு முழுவதும் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
மதுரை கலைநகர் 4-வது தெருவில் உள்ள இல்லத்தில், மகாபலி ராஜாவைப் பூவுலகுக்கு வரவேற்கும் விதமாகச் சம்மங்கி, செவ்வந்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட 50 கிலோ வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் அத்தப்பூ கோலமிடப்பட்டது. ஓணம் பாடல்களைப் பாடி மக்கள் மகாபலி மன்னரை மலர்களால் வரவேற்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் தங்கள் வீடுகளில் மாவிலைத் தோரணங்களைக் கட்டி, திருவாதிரைக் களி நடனமாடித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வீடுகளின் முன்பு போடப்பட்ட அத்தப்பூ கோலத்தை அண்டை வீட்டார் ஆர்வமுடன் பார்த்து ரசித்துப் பரிமாறிக் கொண்டனர். மேலும், உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துச் சுவையான பருப்புப் பாயாசம் வழங்கி ஓணம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாகப் புத்தாடை அணிந்து, பாரம்பரிய முறையில் ஓணம் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- Madurai
மதுரையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை
மதுரையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை
