• Home  
  • 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்சைக்கிள் ரோந்து
- Madurai

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்சைக்கிள் ரோந்து

மதுரையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்கொண்டு வரப்பட்ட சைக்கிள் ரோந்து

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில், பாதுகாப்பை பலப்படுத்தவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இருசக்கர வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கண்காணிக்கவும் பழங்கால பாரம்பரிய முறையை மீட்டெடுக்கவும் மாநகர காவல்துறை சார்பில் சைக்கிள் ரோந்து பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, போலீசார் சித்திரை வீதிகளில் சைக்கிளிலேயே வலம் வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் நெரிசலான பகுதிகளுக்குள் எளிதாகச் சென்று பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்க முடிகிறது.

வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பழமையான இந்த சைக்கிள் ரோந்து முறைக்கு அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.