• Home  
  • கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- Virudhunagar

கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 560 புதுமையான அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

பள்ளி மேனேஜிங் போர்டு செயலாளர் பொன்ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் மணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் 1,120 மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று 560 அறிவியல் மாதிரிகளைக் காட்சிப்படுத்தினர்.

மாணவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய படைப்புகளில், குறிப்பாக விண்வெளி மற்றும் பிரபஞ்சத்தின் மாதிரி அமைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. மேலும், விண்வெளி வீரர், ஏலியன் மற்றும் அறிவியல் அறிஞர்கள் போன்று வேடமணிந்த மாணவர்கள் கண்காட்சிக்கு வந்தவர்களை வரவேற்று அசத்தினர்.

கண்காட்சியைப் பார்வையிட்ட செந்திக்குமார நாடார் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் பிரித்திவி குமரன், சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களைப் பாராட்டிப் பரிசுகளை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் காளிராஜன் மற்றும் ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அனைத்துத் துறை சார்ந்த படைப்புகளும் இடம்பெற்றிருந்த இந்தப் பயனுள்ள கண்காட்சியைப் பெற்றோர்களும், ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் பார்வையிட்டுப் பயனடைந்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.