விருதுநகர் அருகே செவல்பட்டியில், பிரிந்து சென்ற மனைியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதைக் கண்டித்த மாமியாரைக் கத்தியால் குட்டிக் கொன்ற மருமகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டியைச் சேர்ந்த சிவாவும், செவல்பட்டியைச் சேர்ந்த வாசகதேவியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக வாசகதேவி கணவரைப் பிரிந்து தாய் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மனைியைச் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லச் சென்ற சிவாவிற்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றதை மாமியார் சாந்தி (55) மற்றும் மனைவியின் சகோதரர் சாமி முருகன் (32) ஆகியோர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிவா, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் சாந்தியைச் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்ற மைத்துனர் சாமி முருகனுக்கும் பலத்த கத்திகுத்து விழுந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சாமி முருகன், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாகியிருந்த சிவாவைச் சூலக்கரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
மாமியாரைக் கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது
மாமியாரைக் கத்தியால் குத்திக் கொன்ற மருமகன் கைது
