• Home  
  • கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம்
- Dindigul

கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம்

திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகத் திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாகப் புதிய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா விமரிசையாக நடைபெற்றது.

பௌர்ணமியும் சதய நட்சத்திரமும் கூடிய சுபயோக தினமான இன்று, ஆகம மற்றும் சிற்ப சாஸ்திர முறைப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவரும் இக்கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, துலா லக்னத்தில் யந்திரம் மற்றும் நவரத்தினங்கள் வைக்கப்பட்டுப் புதிய கொடிமரம் முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பக்தர்கள் சிரமமின்றி வழிபட ஏதுவாகத் திருமண மண்டபத்தில் அத்தி மரத்திலான அம்மன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும், திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் வரும் தை மாதத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொடிமர ஸ்தாபன விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்து வழிபட்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.