நேபாளத்தில் ஏற்பட்ட கோரப் பெருவெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியும் மதுரையில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
மதுரை கூடல்நகர் பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோயிலில் நடைபெற்ற இச்சிறப்புப் பிரார்த்தனைக்கு 'அனுஷத்தின் அனுக்கிரகம்' அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் மனவலிமை கிடைக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தனர்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் தடையின்றி விரைந்து கிடைக்க வேண்டும் எனவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
- Madurai
நேபாள வெள்ளப் பேரிடர் சிறப்புப் பிரார்த்தனை
நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனை
