• Home  
  • “பெட்டர் சிட்டி” திட்டம் – மக்கள் குறை கேட்புப் பிரச்சாரம்
- Dindigul

“பெட்டர் சிட்டி” திட்டம் – மக்கள் குறை கேட்புப் பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் – “பெட்டர் சிட்டி” திட்டம் – மக்கள் குறை கேட்புப் பிரச்சாரம்

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருண் பாஸ்கர் தலைமையில் "பெட்டர் சிட்டி" திட்டத்தின் கீழ் மக்கள் குறை கேட்புப் பிரச்சாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் "மக்கள் சேவகன்" இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 39-வது வார்டில் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக கவுன்சிலர்கள் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் எவ்வித அடிப்படைத் தேவைகளையும் செய்யாமல், மாநகராட்சியைப் பாதாளத்தில் புதைத்துவிட்டதாக அருண் பாஸ்கர் குற்றம் சாட்டினார். மேலும், 39-வது வார்டில் மேடு பள்ளமான சாலைகள், தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் உப்பான குடிநீரே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குறை கேட்புப் பிரச்சாரம் நடத்தி, பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மற்றும் ஆதாரங்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை கோரப்படும் எனவும், தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அக்னி ராஜ், கௌசில், கார்த்திக், பகத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.