திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஜ் அகமது தலைமையில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி முற்றுகை மற்றும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 145 இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்குரிய நிலம் எங்கே உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் முறையான பதில் கிடைக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அவர்கள் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் காவல்துறையினரும் அதிகாரிகளும் நடத்திய தீவிர பேச்சுவார்த்தையில், உரிய இடத்தை விரைவில் அளந்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய சோசியலிஸ்ட் கட்சி மரிய திவாகர், மருதநாயக மக்கள் கட்சித் தலைவர் தமீம் அன்சாரி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கிழக்கு மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் பாலாஜி மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- Dindigul
மஜ்லிஸ் கட்சி – தாலுகா அலுவலகம் முற்றுகை & காத்திருப்புப் போராட்டம்
ஜ்லிஸ் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முற்றுகை & காத்திருப்புப் போராட்டம்
