• Home  
  • மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்
- Dindigul

மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல்லிலும் அலுவலர்கள் பணிக்கு வராததால் மாநகராட்சி அலுவலகம் வெறிச்சோடியது.

நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்குக் கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளைக் கலந்தாய்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; அரசாணை எண் 152 மற்றும் 10-ன் படி விடுபட்ட அலுவலக உதவியாளர், வருவாய் உதவியாளர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரத்தைத் தாண்டி ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை தராத காரணத்தால் வளாகம் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. இதன் காரணமாக, பொதுமக்களுக்கான வரி வசூல் மற்றும் இதர அடிப்படைச் சேவைப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு முடங்கின

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.