• Home  
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – மனு அளிக்கும் போராட்டம்
- Madurai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – மனு அளிக்கும் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

மதுரை கள்ளந்திரி மற்றும் பொருசுபட்டி ஊராட்சிப் பகுதிகளில், விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 நாட்கள் வேலை வழங்குவதுடன் தினக்கூலியாக ரூ.345 வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

வறுமையில் வாழும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு உடனடியாகத் தடையின்றி வேலை வழங்க வேண்டும்; புதிய திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 125 நாள் வேலை மற்றும் ரூ.345 தினக்கூலியை எந்தவிதத் தடையுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகளும் ஏராளமான தொழிலாளர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.

ங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.