அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படக் குழுவினர் மதுரை மாட்டுத்தாவணி வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களைச் சந்தித்துச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
‘மொத ராத்திரி’ என்ற பெயரைக் பார்த்து யாரும் எந்தவிதத் தவறான எண்ணமும் கொள்ள வேண்டாம் என்றும், பெயருக்கு ஏற்றாற்போல் முகம் சுழிக்கும் காட்சிகள் ஏதுமின்றி முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
தான் ஒரு மதுரைக்காரர் என்றும், தனது தந்தை சோழவந்தான் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் மதுரையில் கிடைத்த இந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குநர் ராஜா கருப்பசாமி தெரிவித்தார். மேலும், 80-களின் இளைஞர்களின் அடையாளமான நடிகர் சிலம்பரசன் விரைவில் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
திரையரங்குகளில் படத்திற்கு நாளுக்கு நாள் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், ‘டாக்ஸிக்’ படத்திற்கு இணையாகத் தங்களது படமும் பேசுபொருளாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கதாநாயகன் ரிஷிகாந்த், கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
மதுரை ரசிகர்களின் உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- Madurai
‘மொத ராத்திரி’ – இயக்குநர் ராஜா கருப்பசாமி பேட்டி
‘மொத ராத்திரி’ படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி பேட்டி
