• Home  
  • கிருஷ்ண ஜெயந்தி விழா – மாறுவேடப் போட்டி
- Madurai

கிருஷ்ண ஜெயந்தி விழா – மாறுவேடப் போட்டி

கிருஷ்ண ஜெயந்தி விழா – குழந்தைகளின் கண்கவர் மாறுவேடப் போட்டி

வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் தமிழ் அரிமா சங்கம் இணைந்து நடத்திய கிருஷ்ண ஜெயந்தி மாறுவேடப் போட்டி விமரிசையாக நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, தமிழ் அரிமா சங்கப் பட்டயத் தலைவர் விஜய பிரகாஷ், செயலாளர் தங்கதுரை உள்ளிட்டோர் இப்போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

கிரீடம், புல்லாங்குழல் மற்றும் பட்டுச் சால்வையுடன் கிருஷ்ணர் வேடத்திலும், பேரழகான ராதை வேடத்திலும் குழந்தைகள் வந்து அசத்தினர். பெற்றோருடன் கோவில் வளாகத்தில் அவர்கள் அணிவகுத்து வந்த காட்சி காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

மதுரை சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் நடுவராகக் கலந்துகொண்டு சிறந்த வேடங்களைத் தேர்ந்தெடுத்தார். போட்டியில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.