• Home  
  • யாசகம் பெற்ற பணத்தில் நேபாள நிலச்சரிவு நிவாரணம்
- Dindigul

யாசகம் பெற்ற பணத்தில் நேபாள நிலச்சரிவு நிவாரணம்

யாசகம் பெற்ற பணத்தில் நேபாள நிலச்சரிவு நிவாரணம் வழங்கிய பூல் பாண்டி

திண்டுக்கல்லில், பொதுமக்களிடம் யாசகம் பெற்றுத் தனது வாழ்வாதார நடத்தி வரும் முதியவர் ஒருவர், நேபாளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10,000 நிவாரண நிதி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பூல் பாண்டி. மனைவி இறந்த பிறகு ஊரை விட்டு வெளியேறிய இவர், கடந்த 51 ஆண்டுகளாகப் பொதுமக்களிடம் யாசகம் பெற்றுக் கிடைப்பதைக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பூல் பாண்டி, தான் பொதுமக்களிடம் யாசகமாகப் பெற்ற பணத்திலிருந்து ரூ.10,த்தாயிரத்தை நேபாளத் துயர நிவாரணத்திற்காக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் நேரில் வழங்கினார்.

இவர் கடந்த கொரோனா காலத்திலும்கூட, தான் யாசகம் பெற்ற தொகையிலிருந்து பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தொடர்ந்து நிதி வழங்கி உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.