விருதுநகர் காமாட்சி அம்மன் மாளிகையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் மற்றும் நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டின் இரண்டாம் நாளில் சங்கத்தின் புதிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மகளிர் மாநாடு நடைபெற்றது. மாலையில் அரசு மருத்துவமனை அருகில் தொடங்கி நகராட்சி மைதானம் வரை கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரம்மாண்டப் பேரணியும், அதனைத் தொடர்ந்து பொது மாநாடும் நடத்தப்பட்டது.
பொது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், "ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உங்களில் ஒருவராக இருந்து வந்தவர் என்பதால் உங்களின் கோரிக்கைகளை நேரில் சந்தித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். கடந்த ஆட்சிகளைப் போலன்றி, எங்களை எப்போது வேண்டுமானாலும் எளிதில் அணுகி உங்கள் கோரிக்கைகளைக் கூறலாம்; முதல்வர் உங்கள் கோரிக்கைகளுக்குக் கண்டிப்பாகச் செவிசாய்ப்பார்" எனத் தெரிவித்தார்.
மாநாட்டின் இறுதியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு நிறைவு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு நிறைவு
