ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ஆந்திராவில் சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6,000, கடுமையான ஊனமுற்றோருக்கு ரூ. 10,000 வரை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் தற்போதும் வெறும் ரூ. 1,500 மற்றும் ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உதவித்தொகையை ரூ. 6,000 ஆக உயர்த்த வேண்டும் அல்லது தேர்தல் வாக்குறுதியின்படி குறைந்தபட்சம் ரூ. 3,000 ஆவது உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்லில் இன்று 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
- Dindigul
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் – முற்றுகை போராட்டம்
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் – முற்றுகை போராட்டம்
