• Home  
  • மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – உயர் மட்ட ஆலோசனை
- Madurai

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – உயர் மட்ட ஆலோசனை

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – அமைச்சர்கள் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில், தற்போது இறுதி மற்றும் சிறப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், 58 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் தொடர்பான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.