Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • சிவகார்த்திகேயன் மக்களுக்கு ஜிகர்தண்டா வழங்கி உற்சாகம்
- Madurai

சிவகார்த்திகேயன் மக்களுக்கு ஜிகர்தண்டா வழங்கி உற்சாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் பொதுமக்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி வழங்கி உற்சாகம்

மதுரையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், படப்பிடிப்பு இடைவேளையில் விளக்குத்தூண் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடைக்குச் சென்று ஜிகர்தண்டா வாங்கிப் பொதுமக்களுக்கு வழங்கியதுடன், ரசிகர்களுடன் எளிமையாகப் பேசி மகிழ்ந்தார்.

திரைப்படப் படப்பிீடிப்புக்காக மதுரைக்கு வருகை தந்துள்ளது நடிகர் சிவகார்த்திகேயன், ஷூட்டிங் இடைவேளையின்போது மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க விளக்குத்தூண் பகுதிக்குச் சென்றார்.

அங்குள்ள பிரபல ஜிகர்தண்டா கடைக்குச் சென்று மதுரையின் பாரம்பரியச் சுவையான ஜிகர்தண்டாவை வாங்கிய அவர், கடைக்கு அருகில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்குத் தனது கைகளாலேயே ஜிகர்தண்டாவை வழங்கித் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

தங்களது நடிகரை எதிர்பாராத விதமாக நேரில் கண்ட ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டு அவருடன் உற்சாகமாகச் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். ரசிகர்களிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் சிவகார்த்திகேயன் பழகிய இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.