விருதுநகரில் காலை முதல் சுட்டெரித்து வந்த வெயிலின் தாக்கம் மாலையில் பெய்த திடீர் கனமழையால் முற்றிலுமாகத் தணிந்ததோடு, நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகரில் நேற்று காலை முதல் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலையில் திடீரெனத் தொடங்கிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்து வெளுத்து வாங்கியது.
நகர் பகுதியில் பாவாலி ரோடு, நந்தா ஹோட்டல் அருகில் உள்ள இணைப்புச் சாலை மற்றும் பழைய பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடந்தது.
சத்திரரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், சூலக்கரை, அல்லம்பட்டி, பெரியவள்ளிக்குளம் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழையின் காரணமாக நகரில் நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்களும், மானாவாரி பயிர்களைச் செய்துள்ள விவசாயிகளும் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
- Virudhunagar
இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை
விருதுநகரில் மாலையில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை
