மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட 'மல்லிகை' கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்தத்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் திறந்து வைத்து, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துத்துறை செயலாளர் ஆர்.லில்லி, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சுரேஷ்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்தித் துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யப்படும் என்றும், வரும் காலங்களில் உள்நாட்டிலேயே பட்டு உற்பத்தி மற்றும் பட்டு ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை குறித்துப் பேசிய அவர், துறைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துச் சரகங்களிலும் நெசவாளர்களின் கருத்துகளைக் கேட்டு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதிகிராப்ட் விற்பனை நிலையங்கள் பொதுமக்களைக் கவரும் வகையில் மேலும் நவீனப்படுத்தப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அரசியல் கேள்விக்குத் துறை சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்கக் கோரி பதிலளிக்காமல் சென்றார்.
- Madurai
நவீனப்படுத்தப்பட்ட மல்லிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
மதுரையில் நவீனப்படுத்தப்பட்ட மல்லிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
