• Home  
  • SDTU ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு – ஆர்ப்பாட்டம்
- Madurai

SDTU ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு – ஆர்ப்பாட்டம்

SDTU – ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு & பைக் டாக்ஸி தடை – ஆர்ப்பாட்டம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பைக் டாக்ஸியை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் எஸ்டிடியூ (SDTU) தொழிற்சங்கம் தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்குதல், பைக் டாக்ஸி சேவைகளைத் தமிழகத்தில் நிரந்தரமாகத் தடை செய்தல், அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்துவதைக் கைவிடுதல் மற்றும் நலவாரியங்களில் வழங்கப்படும் பணப் பயன்களை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் சர்தார் உசேன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.