• Home  
  • மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் – இரண்டாம் கட்ட ஆய்வு
- Madurai

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் – இரண்டாம் கட்ட ஆய்வு

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட நிலையில், ஊடகவியலாளர்களின் அனுமதி மற்றும் நேரலை வசதிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகப் பணிகள் குறித்து, அமைச்சர் நிர்மல் குமார், மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இரண்டாவது முறையாகக் கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின்போது அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கோயிலுக்குள் சென்று செய்தி சேகரிக்க உரிய அனுமதி ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், அதேபோன்று கும்பாபிஷேக விழாவைத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் நேரலை செய்யக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும், நேரலை காண பிரத்யேக YouTube இணைப்புகள் (Links) வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், அதிமுகவை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றதில் 100 சதவீதம் பங்கு ஆர்.பி. உதயகுமாருக்கே உண்டு எனக் கடுமையாகச் சாடியதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாகப் பொதுச்செயலாளர் ஆவதற்கான பணிகளில்தான் அவர் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.