விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற லோடுமேன் மீது கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு ஏடிபி காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த லோடுமேன் கார்த்திக் ராஜா, கடந்த 9 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதி எதிரே நடந்து வந்து சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக் ராஜா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார், கார்த்திக் ராஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய நெல்லை மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிவா மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
லோடுமேன் மீது கார் மோதி உயிரிழப்பு
சாலையைக் கடக்க முயன்ற லோடுமேன் மீது கார் மோதி உயிரிழப்பு
