விருதுநகர் சாத்தூர் ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தவாரி மண்டபத்தின் 120-ஆம் ஆண்டு பூர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு விழாவை முன்னிட்டு, கல்மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பராசக்தி வெயில் உகந்த அம்மன், ஸ்ரீ பராசக்தி மாரியம்மன், ஸ்ரீ சொக்கர் பிரியாவிடை அம்மன், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ தேவி பூதேவி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மீனாட்சி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து உற்சவமூர்த்திகளும் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
மண்டபத்தில் எழுந்தருளிய தெய்வங்களுக்குச் சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன், மாணவிகளின் கண்கவர் நாட்டியாஞ்சலியும் நடைபெற்றது.
விழாவின் நிறைவாக, வண்ணமயமான வானவேடிக்கையுடன் தெய்வங்கள் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இம்மாபெரும் விழாவில் விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கல் மண்டபத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- Virudhunagar
VHND கல் மண்டபத்தின் 120 ஆம் ஆண்டு பூர்த்தி விழா
இந்து நாடார்கள் தேவஸ்தானக் கல் மண்டபத்தின் 120 ஆம் ஆண்டு பூர்த்தி விழா
