• Home  
  • காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Dindigul

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ள உத்தரகாண்ட் காவல்துறையினர் மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் உத்தரகாண்டில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடையை இந்து அமைப்பினர் கங்கை நீர் தெளித்து 'சுத்தப்படுத்தியதை' எதிர்த்து ராகுல் காந்தி குரல் எழுப்பியிருந்த நிலையில், பாஜக அரசு அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், கிழக்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் இளைஞர், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாஜக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.