விருதுநகர் அருகே உள்ள வள்ளிக்குளம் தனியார் பள்ளி மைதானத்தில், சிவகாசி சில்ட்ரன்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 18 பள்ளிகளைச் சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.
4 வயது முதல் 16 வயது வரை பல்வேறு வயதுப் பிரிவுகளாகத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களும், சிறப்பிடம் பெற்ற பள்ளிகளுக்குப் பரிசுக் கோப்பைகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள், வருகிற நவம்பர் மாதம் முதல் வாரம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Virudhunagar
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள்
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் – வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்குத் தகுதி
